• Dec 26 2024

மேட்ச் தொடங்கும் முன்பே விழுந்தது முதல் விக்கெட்.. திமுகவில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் ஆரம்பித்து ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் அவருடைய விஜய் மக்கள் இயக்கத்தை நிர்வாகி ஒருவர் திமுகவில் இணைந்து விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் ஆரம்பித்து இருந்தாலும் அந்த கட்சியின் நிர்வாகிகள் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அப்படியே தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளாக மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த பில்லா ஜெகன் என்பவர் திடீரென திமுகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் திமுகவில் இணைந்துள்ளதை அடுத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பதவியை அவர் ராஜினாமா செய்து உள்ளதாக தெரிகிறது.



இதனை அடுத்து பில்லா ஜெகனின் சகோதரர் சுமன் என்பவரை புஸ்ஸி ஆனந்த் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதிதாக ஒரு அரசியல் கட்சி தோன்றினால் அந்த கட்சியை உடைப்பது எப்படி என்ற தந்திரத்தை திமுக பல வருடங்களாக செய்து வரும் நிலையில் தற்போது விஜய் கட்சியின் நிர்வாகிகளும் தூக்கப்பட்டு வருவதை பார்க்கும் போது மேட்ச் ஆரம்பிக்கும் முன்பே ஒரு விக்கெட் இழந்து விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Advertisement

Advertisement