தமிழ் சினிமாவில் தனித்துவமான காட்சிப்படுத்தலுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்”.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தற்போது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்” திரைப்படத்தில் பல பிரபல நடிகர்கள் இணைந்துள்ளனர். தமிழில் முன்னணி நடிகராகத் திகழும் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், மற்றும் இளம் நட்சத்திரமான ராஜ் தருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த கூட்டணி திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இந்நிலையில், “காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

Listen News!