• Dec 26 2024

பார்த்திபன் இயக்கத்தில் நடிக்க முடியாதென சொன்ன விஜய்.. 3 முட்டாள்கள் தான் காரணமா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் ஒரு படத்தில் நடிக்க இருந்ததாகவும் ஆனால் அந்த படம் சில காரணங்களால் உருவாகவில்லை என்றும் சமீபத்தில் பேட்டி அளித்த பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் நடித்து, இயக்கிய ’டீன்ஸ்’ என்ற திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் தனது படம் குறித்து ஊடகங்களில் பேட்டியளித்து வருகிறார். அவ்வாறு அவர் அளித்த பேட்டியில் ’எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் தனது மகன் விஜய்யை வைத்து ஒரு படத்தை நீங்கள் இயக்க வேண்டும் என்று என்னிடம் சில ஆண்டுகளுக்கு முன் கேட்டதாகவும் நானும் ஓகே சொல்லி ஒரு கதையை அவரிடம் சொன்னபோது அந்த கதை விஜய்க்கு பிடிக்காததால் அவர் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் ஹிந்தியில் வெளியான ‘3 இடியட்ஸ்’ படத்தை ரீமேக் செய்வோம், அதற்கான பணியை தொடங்குங்கள் என்று விஜய் கூறியதாகவும், நானும் தயாரிப்பாளரிடம் பேசி அவரிடம் சம்மதம் பெற்ற பின் அந்த பணியை தொடங்கியதாகவும் தெரிவித்தார். ஆனால் அந்த நேரத்தில் தான் ’3 இடியட்ஸ்’ படத்தை ஷங்கர் ரீமேக் செய்ய விரும்புவதாக கூறப்பட்ட நிலையில் தான் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் விஜய் மற்றும் ஷங்கர் இணைந்தால் அந்த படம் வேற லெவலில் பிசினஸ் கொடுக்கும், அந்த அளவுக்கு என்னால் பிசினஸ் கொடுக்க முடியாது என்று ஒதுங்கி விட்டதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

’ஆனாலும் விஜய்க்காக ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளேன், காலம் வரும்போது அந்த படத்தை இயக்குவேன்’ என்றும் பார்த்திபன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மூன்று முட்டாள்கள் என்ற அர்த்தத்தில் டைட்டில் வைக்கப்பட்ட ’3 இடியட்ஸ்’ திரைப்படம் பார்த்திபன் இயக்கத்தில் விஜய் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

Advertisement

Advertisement