• Dec 26 2024

விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கும் 36 வயது நடிகை.. இதிலும் அவர் பெயர் முதலில் இடம்பெறுமா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!


விஜய் சேதுபதி ஜோடியாக 36 வயது நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்திலும் அவரது பெயர் டைட்டிலில் முதலில் போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளில் ஒருவர் நித்யா மேனன் என்பதும் அவர் தற்போது ஜெயம் ரவியுடன் ’காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலில் நித்யா மேனன் பெயர்தான் முதலிடம் பெற்றது என்பதும்,  இரண்டாவது ஆகத்தான் ஜெயம் ரவி பெயர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நித்யா மேனன் தான் நாயகி என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படமும் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்டது என்றும் விஜய் சேதுபதி இந்த கதையில் தைரியமாக நடிக்க ஒப்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த படத்திலும் தனது பெயர் முதலில் வரவேண்டும் என்று 36 வயது நித்யா மேனன் கோரிக்கை வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்நிலையில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் மட்டுமின்றி இந்த படத்தில் வேறு சில பிரபல நட்சத்திரங்களும் இணைய இருப்பதாகவும் குறிப்பாக இந்த படத்தில் பான் இந்திய நடிகர்கள் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை சின்ன பட்ஜெட் மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை மட்டுமே இயக்கி வந்த பாண்டிராஜ் முதல் முறையாக ஒரு பெரிய பட்ஜெட் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது.

Advertisement

Advertisement