• Dec 26 2024

மகளின் திருமண விழாவில் "ரவுடி பேபி" பாடலுக்கு நடனமாடிய சரத்குமார் மற்றும் ராதிகா !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவி சாயாவுக்கும் பிறந்த மகளான நடிகை வரலட்சுமியின் திருமண நாள் நிகழ்வுகள் பற்றிய பேச்சு கடந்த வாரங்களில் இருந்து சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.திருமண நிகழ்வில் வரலட்சுமிக்கு தாய் ஸ்தானத்தில் இருந்து சிறப்பிக்கிறார் ராதிகா.

Sarathkumar grooves to Vijay song ...

கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், வரலட்சுமியின்  திருமண கொண்டாட்டங்கள் கடந்த சில தினங்களாக களைகட்டி உள்ளன.சில தினங்களுக்கு  முன் ஏராளமான பிரபலங்களின் பங்குபற்றலோடு  வரலட்சுமி - நிக்கோலாய் ஜோடியின் சங்கீத் பங்க்‌ஷன் கோலாகலமாக நடைபெற்றது. 

Varalaxmi Marriage😍 Sarathkumar & Radhika Dance At Haldi - Mehndi Function  | Varalakshmi Wedding - YouTube

இந்த நிலையில்,விழாவில் நடிகை ராதிகா டான்ஸ் ஆடி அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளார்.முதலில் தனியாக  ஆடிய ராதிகா, பின்னர் நடிகர் சரத்குமாரும் இணைந்து  "ரெளடி பேபி" பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்கள். ராதிகாவும் சரத்குமாரும் ஜோடியாக ஆடிய போது எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement