• Dec 27 2024

காக்கா தன் குஞ்சை தள்ளிவிட்டது போல தான் விஜய் சேதுபதியும்.. ஓவரா பண்ணும் சூர்யா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் போராடி அதற்குப் பின்பு தான் நடிகர் சேதுபதிக்கு வாய்ப்பு கிடைத்ததாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். அதுவரை தான் பார்க்காத வேலையே இல்லை என பலருக்கு மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுத்திருப்பார்.

இதைத்தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும், வில்லன் கேரக்டரில் மிரட்டும் நட்சத்திரமாகவும் காணப்படுகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் சேதுபதியின் மகனான சூர்யா தற்போது பீனிக்ஸ் என்ற படத்தின் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இதன் போது அவர் அளித்த பேட்டிகளில், தந்தை வேறு நான் வேறு.. எனது அப்பாவின் பெயரை நான் படத்தில் வைக்கவில்லை என்று கெத்தாக பேசி இருந்தார்.

இந்த நிலையில்,  தற்போது பிரபல யூட்யூப் விமர்சனரான செய்யாறு பாலா விஜய் சேதுபதி மகன் ரொம்ப ஓவரா தான் பண்ணுறாரு என பேசி உள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், விஜய் சேதுபதி மகன் என்ற அடையாளத்தை விட சாதாரணமாக வரும் ஒரு நபருக்கு இப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்து விடுமா? இதை வைத்து  பார்க்கும் போது தனது மகனிடம் விஜய் சேதுபதி.. நீயே போய் மீடியாவை மீட் பண்ணு, நீயே உன் வழியை பார்த்துக் கொள்ளு  என்று காக்கா தன் குஞ்சுகளுக்கு ரெக்கை முளைத்ததும் தள்ளிவிட்டு எத்தனிச்சி பறக்க சொன்னது போல இருக்கு.

மேலும் ஏற்கனவே ஒரு சூர்யா என்று பெயர் இருக்க விஜய் சேதுபதியின் மகன் என்ற பெயரை விட்டு சூர்யா என்று அணுகுங்கள் என்று சொல்லி இருப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

அதுமட்டுமின்றி பீனிக்ஸ் படத்தில் சூர்யாவுடன் வரலட்சுமி,சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், அபி நட்சத்திரா, வர்ஷா, நவீன், நந்தா சரவணன், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இதனால் சொந்த முயற்சியில் முன்னேறும் ஒருவருக்கு, இவ்வளவு பெரிய நடிகர்கள் எல்லாம் ஈஸியா நடிக்க ஒத்து கொண்டு இருக்க மாட்டாங்க.. அதற்கு விஜய் சேதுபதியின் சப்போர்ட் இருந்து இருக்கும் என விளாசியுள்ளார் செய்யாறு பாலா.

Advertisement

Advertisement