• Dec 26 2024

ராகவா லாரன்ஸின் வாய்ப்பை தட்டித் தூக்கிய விஜய் சேதுபதி! காரணம் என்ன தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விக்ரம். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் கமலஹாசனுக்கும் ஒரு கம்பேக்  படமாக இருந்தது.

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இவர் ஆரம்பத்தில் சுந்தர் சி யை வைத்து இயக்கிய தலைநகரம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இதை தொடர்ந்து கார்த்திக்கை வைத்து கைதி  படத்திலும், கமலஹாசனை வைத்து விக்ரம் படத்திலும், இளைய தளபதி உடன் லியோ படத்திலும் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்கள் அத்தனையும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கைப் போடு போட்டது.

d_i_a

அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன், பகத் பாசில், கேமியோ ரோலில் சூர்யாவும் நடித்த திரைப்படம் தான் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கேரக்டரில் மிரட்டி இருப்பார். அவருக்கு மூன்று மனைவிமார் காணப்பட்டனர்.


இந்த நிலையில், விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் தான் நடிக்க வேண்டியது என  ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், லோகேஷிடம் கதை கேட்டேன். குடும்பத்தை எரிப்பது போன்ற வன்முறை காட்சிகளை தவிர்ப்பதற்காக வேறு யாராவது அதில் நடித்தால் நல்லா இருக்கும் என்னால் நடிக்க முடியாது என்று சொன்னேன். இப்போது லோகேஷ் தயாரிக்கும் பென்ஸ் படத்தில் நடித்து வருகின்றேன். இந்த படத்தை ரத்தினவேல் இயக்குகின்றார். இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ராகவா லாரன்ஸ் சொல்லியுள்ளார்.

Advertisement

Advertisement