விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இந்நிலையில் நேற்று எலிமினேஷன் நடைபெற்றது. அதில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் விஜய் சேதுபதிக்கு விருப்பம் இல்லாமல் ஒருவர் வெளியேறி இருக்கிறார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 85 நாட்களை வெற்றிகரமாக கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் நேற்று டபுள் எலிமினேஷன் நடைபெற்றது. அதில் அன்ஷிதா மற்றும் ஜெப்ரி வெளியேறியுள்ளார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி ஜெப்ரி பெயரினை அறிவிக்கும் முன்னர் இவ்வாறு கூறியுள்ளார். " எனக்கு சொல்லுறதுக்கு உடன்பாடு இல்லை, வேற வழியில்லை சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்" என்று சொல்லி ஜெப்ரி பெயரை காட்டுகிறார். அதை பார்த்து அணைவரும் அதிர்ச்சியாகிவிடுகிறார்கள்.
மேலும் பேசிய விஜய் சேதுபதி " ஜெப்ரி உனக்கு வாழ்த்துக்கள் டா, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன். ஓகே எல்லாரோடையும் பேசிட்டு வா" என்று சொல்கிறார். ஜெப்ரி வெளியேறுவது போட்டியாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. என்னவாக இருப்பினும் மக்களின் வாக்குகள் அடிப்படையிலே எலிமினேஷன் நடைபெற்றுள்ளது. இனி வரும் நாட்களில் போட்டியாளர்களிடையே போட்டி இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!