• Dec 31 2024

கொளுத்துங்கடா வெடிய..! பாக்கியா தலையில் விழுந்த பேரிடி.! ஆடிப்போன ஈஸ்வரி

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று விரிவாக பார்ப்போம்.

ஏற்கனவே, ராதிகா வீட்டை காலி பண்ணி விட்டு செல்கின்றார். இந்த விடயம் கோபிக்கு தெரியாமல் ஈஸ்வரியும், இனியாவும்  மறைக்கின்றார்கள். ஆனால் பாக்கியா கோபியுடன் தனியாக கதைக்க வேண்டும் என்று ரூமுக்கு கூட்டிச் சென்று அனைத்தையும் சொல்லி அனுப்புகின்றார்.

இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் ராதிகா வீட்டை காலி பண்ணிவிட்டு போய்விட்டார் என கோபி இடிந்து போய் உட்காருகின்றார். இதன் போது ஈஸ்வரி அவ கூட எல்லாம் வாழ முடியுமா? போய் தொலையட்டும் விட்டுவிடு என்று சொல்லுகின்றார்.

d_i_a

இதைக் கேட்ட பாக்கியா, எப்படியோ போ என்று ராதிகாவை விட்டுவிட்டு நீங்க இங்க வந்து இருக்க கூடாது. இனியாவை கல்யாணம் பண்ணிவிட்டு ஒருத்தர் விட்டுவிட்டு போனால் அது உங்களுக்கு சரியா இருக்குமா என்று  பதிலடி கொடுக்கிறார்.


இதை தொடர்ந்து கோபி ராதிகாவை பார்க்க செல்கின்றார். அங்கு கோபியை பார்த்ததும் மையூ அவரைக் கட்டி அணைத்து கொள்கின்றார். 

இன்னொரு பக்கம் அவர் கட்டின பொண்டாட்டியை தேடிப் போகின்றார்.. இதுல நீங்க டென்ஷன் ஆக வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று பாக்கியா ஈஸ்வரிக்கு சொல்லுகின்றார்.

ஆனாலும் கோபி என்னிடம் மீண்டும் வருவான்.. அவனுக்கு அம்மா பாசம் அதிகம் என்று ஈஸ்வரி சவால் விடுகின்றார். அதன்படியே  கோபியும் நீங்க சொன்ன மாதிரியே வந்துட்டேன் என்று மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அவர் ராதிகாவையும் மையூவையும் கூடவே கூட்டி வந்துள்ளார். எனவே இந்த ப்ரோமோ இப்படி வெளியான நிலையில் இனி பாக்யா எடுக்கப் போக முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement