• Apr 04 2025

மீண்டும் வில்லனாக வரும் விஜய் சேதுபதி..! ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்த படக்குழு!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் பலதரப்பட்ட கதாப்பாத்திரங்களை வாழவைத்தவர் நடிகர் விஜய் சேதுபதி. ஒரு காலத்தில் தனது பேச்சுத் திறமையால் சினிமா ரசிகர்களை நெகிழ வைத்த விஜய் சேதுபதி இன்று இந்திய திரையுலகின் பன்முக திறமை கொண்ட நடிப்பு நாயகனாக திகழ்கின்றார்.


குறிப்பாக, 96 , விக்ரம் , மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த விஜய் சேதுபதி சில வருடங்களாக ஹீரோவுக்குத் துணையான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார். அந்தவகையில் தற்பொழுது பிரபல பாலிவூட் நடிகர் பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கும் "SPIRIT" படத்தில் பிரபாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதில் வில்லனாக விஜய் சேதுபதி இணைகின்றார் என்ற செய்தி ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்திருப்பதால் படம் திரையரங்குகளில் வெளியானவுடனே ரசிகர்களிடையே அதிகளவு வசூலைப் பெற்றுக் கொடுக்கும் எனப் படக்குழு எதிர்பார்க்கின்றது.



Advertisement

Advertisement