• Dec 26 2024

தளபதி டிவியாக மாறும் கேப்டன் டிவி.. டீலிங் முடிந்தது என தகவல்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் தன்னுடைய அரசியல் கட்சியை மக்கள் மத்தியில் பிரபலமாக்க சொந்தமாக ஒரு டிவி சேனல் வேண்டும் என்பதை முடிவு செய்து அவர் தளபதி டிவி என்ற புதிய டிவி சேனலை ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தற்போதைய நிலையில் ஒரு புதிய டிவி சேனலை தொடங்க வேண்டும் என்றால் அதற்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை கணக்கில் கொண்டு அவர் ஏற்கனவே இயங்கி வரும் டிவி சேனலை வாங்க முடிவு செய்ததாக கூறப்பட்டது. 



முதல் கட்டமாக ஒரு சில டிவி சேனல்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் தற்போது கேப்டன் டிவியை விஜய் வாங்க இருப்பதாகவும் அதைத்தான் அவர் தளபதி டிவி என்ற பெயர் வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

முதலில் விஜய் டிவி என்ற பெயர் வைக்க தான் அவருக்கு விருப்பம் இருந்ததாகவும் ஆனால் ஏற்கனவே விஜய் டிவி என்ற பெயரில் ஒரு டிவி சேனல் இயங்கி வருவதை அடுத்து, அது சாத்தியமில்லை என்பதால் தளபதி டிவி என்ற பெயரில் அவர் டிவி சேனலை தொடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

பொதுவாக விஜய் அரசியலுக்கு வந்து விட்டால் அவருடைய பாசிட்டிவ் செய்திகளை மற்ற தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்ப வாய்ப்பில்லை என்பதால் சொந்தமாகவே ஒரு டிவி சேனல் நடத்தி அதன் மூலம் தனது கட்சியின் கூட்டம், கொள்கைகள் பிரச்சாரம் ஆகியவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 

கேப்டன் டிவியை தன் வசப்படுத்த விஜய் பல கோடிகளை கேப்டன் டிவி நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தளபதி டிவி ஒளிபரப்பாகும் என்பதால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.


Advertisement

Advertisement