• Dec 26 2024

கடையில் வேலை கேட்டு போய் நிற்கும் பொன்னி .... அடடே என்ன ருசியா இருக்கு மீன் குழம்பு புகழ்ந்து தள்ளிய மாமனார் ...

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் பொன்னி.  புதிதாக ஆரம்பிக்கப்பட்டாலும்  சீரியல் செம ஹிட்டாக  ஓடிக்கொண்டு இருக்கிறது . சிறுவயது காதல்,நட்பு என்பவற்றை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.  


வகையில் இந்த சீரியலில் அடுத்து   என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது "  பொன்னி காய்கறி வேண்டுவதற்காக கடைக்கு போய் இருப்பார் . அந்த வேளையில் காய்கறி வேண்டும் அளவுக்கு பொன்னியிடம் பணம் இல்லாததால் அந்த கடையிலேயே வேலை கேட்கிறார்.அதற்கு கடைக்காரர் கேட்கிறார். உன்னால என்ன வேலை செய்ய முடியும் என்று அதற்கு பொன்னி தைரியமாக சொல்லுவார் என்னால எல்லா வேலைகளும் செய்ய முடியும் என்று , கடைக்காரரும் பொன்னிக்கு வேலை கொடுப்பார்.


வேலைகளை முடித்து விட்டு வீடு வந்த பொன்னி சமைத்து கொண்டு இருப்பார் . அந்த வேளையில் குடும்பமாக இருந்து சாப்பிட ஆயத்தமாகும் போது ஷக்தி கேட்கிறார் , நல்ல மீன் குழம்பு வாசம் வந்ததே அப்போ அது இங்க இருந்து வரவில்லையா? அதற்கு ஷக்தி அப்பா சொல்கிறார் , என்னுடைய மருமகள் பொன்னி சமைக்கிற வாசம் தான் இங்க மட்டும் வருகிறது. நான் என்னுடைய மருமகள் கையாலேயே சாப்பிட போகிறேன் என்று சொல்லி பொன்னியிடம் வருகிறார். 


பொன்னியும் அன்பாக மாமாவுக்கு உணவு பரிமாறி கொடுக்கிறார். மாமாவும் சாப்பிட்டு ருசி பயங்கரமாக இருக்கிறது என்று சொல்கிறார் .இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement