• Dec 25 2024

விஜய் டிவி சீரியல் குத்துவிளக்கு நடிகையும் கோமாளியா? லிஸ்ட் ரொம்ப நீளுதே..!!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் வெற்றிகரமாக நான்கு சீசன்களை முடித்த குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

குக் வித் சீசன் 5வது சீசனில் புதிய நடுவராக பிரபல நடிகரும், தொழில் அதிபரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ்  களம் இறங்கியுள்ளார்.

இந்த சீசனில் பங்குபெற்றும் போட்டியாளர்களாக யூடியூபர் இர்ஃபான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த், நடிகை திவ்யா துரைசாமி, பிரியங்கா, நடிகர் வசந்த், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியது.


இவர்களைத் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்களான விஷ்ணு விஜய், பாண்டியன் ஸ்டோர் ஹேமா, சுனிதா, புகழ், குரேஷி, மோனிஷா மற்றும் விஜய் டிவி ராமர், நடிகர் கூல் சுரேஷ், தெய்வமகள் சீரியல் நடிகை ஆன ஷபி என்பவரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலின் கதாநாயகியும் கோமாளியாக சொல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அது 'செல்லம்மா' தொடரின் ஹீரோயின் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுஜிதாவும் இதில் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement