• Jan 26 2025

விஜய் டிவியின் Mr & Mrs சின்னத்திரை.. முட்டி மோத தயாரான 10 ஜோடிகளின் லிஸ்ட்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோக்களில்  ஒன்றுதான் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை. இதில் செலிபிரிட்டிகள் அவர்களுடைய சொந்த பார்ட்னருடன் இந்த போட்டியில் பங்கு கொள்வார்கள்.

இதுவரை நடைபெற்ற நான்கு சீசன்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் ஆரம்பமாக உள்ளது.

இந்த நிலையில், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ஐந்தாவது சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

அதில், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜிதா - கார்த்திக் ஜோடி கலந்து கொள்ள போகின்றது. இந்திரஜிதா பிகில் மற்றும் பிரம்மன் படங்களில் நடித்துள்ளார். அவருடைய கணவரும் உதவி இயக்குனராக காணப்படுகின்றார்.


தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதை கேரக்டரில் நடித்த மீரா கிருஷ்ணனும், அவருடைய கணவர் சிவகுமாரனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்கள்.


விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழின்  தம்பி கார்த்திக் கேரக்டரில் நடித்த நவீன், தன்னுடைய மனைவி சௌமியாவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.


விஜய் டிவி பிரபல காமெடி நடிகரான நாஞ்சில் விஜயனும் தன்னுடைய மனைவி மரியாவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.


பிரபல யூட்யூப் சேனலில் ஹேண்ட்பேக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆஷிக், தன்னுடைய மனைவி சோனுவுடன் இந்த நிகழ்ச்சி கலந்து கொள்ள உள்ளார்.


மோதலும் காதலும் சீரியலின் ஹீரோவான சமீர்,  அவருடைய மனைவி அஜிபாவுடன் கலந்து கொள்ள உள்ளார்.


முத்தழகு சீரியலில் நடிக்கும் வைஷாலினி தன்னுடைய கணவர் தேவ் உடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.


கல்யாணம்  முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்த அமீர், தன்னுடைய மனைவி ரஞ்சினி உடன் கலந்து கொள்ள உள்ளார். இவர் மிருதன், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார்.


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லிச்சி, தனது கணவர்  சுரேந்தருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான தாமரை,  தன்னுடைய கணவர் பார்த்தசாரதியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.


இந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகரான கொட்டாச்சி தனது மனைவி அஞ்சலியுடன் கலந்து கொள்ள உள்ளார்.


Advertisement

Advertisement