• Dec 25 2024

கண்திருஷ்டி அம்மனால் மனோஜிக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம்! கடும் கோபத்தில் விஜயா!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

மக்களின் மனங்களை வென்ற சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ரோகிணி எதற்க்காக மீனாவுக்கு உதவி செய்யவேண்டும் என்று முத்து தீவிரமாக இறங்கி விசாரிக்கிறார். ரோகிணியின் ரகசியத்தை முத்து கண்டு பிடித்து விடுவாரா என்ற எதிர்பார்ப்பில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று என்று நடைபெறுகிறது என்று பார்ப்போம் வாங்க. 


முத்து செல்வத்திடம் ரோகிணி ஏதோ கள்ள வேலை செய்கிறார் அதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை வருது அதனை கண்டு புடிக்கவேண்டும் என்று சொல்கிறார். குடும்பத்தில் பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ளு என்று செல்வம் சொல்கிறார். இப்படி இவர்கள் கதைத்து கொண்டு இருக்கும் போது மீனாவை போலோ பண்ணும் அந்த நபர் வருகிறார். என்ன காதல் சொல்லியாச்சா என்று கேட்கிறார் முத்து. இல்ல அண்ணே அவங்க கிட்ட போய் சாரி கேட்டேன் மத்தபடி பேசபயமா இருக்கு என்று சொல்கிறார். 


அதற்கு முத்து காதலிக்க முதலில் தைரியம் வேணும், பூ, பழம் எல்லாம்  வாங்கிட்டு அந்த பொண்ணு வீட்டுக்கு போய் அவங்க அப்பாகிட்ட பொண்ணு கேளு என்று சொல்கிறார். அதற்க்கு அந்த நபர் நன்றி சொல்லி முத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு போகிறார். வீட்டில் கண் திருஷ்ட்டி புகைப்படத்தை வைத்துக்கொண்டு விஜயா இது எப்படி அங்க வந்துச்சி என்று கேட்கிறார்.


அதற்கு மனோஜ் ஒருத்தர் கண்திருஷ்ட்டினு சொல்லி கூவி கூவி வித்தாரு வாங்கி வஞ்ச யோகம் நல்ல ஓடர் கிடைச்சிச்சி அப்புறம் தான் ரோகிணி சொன்னா அது உங்க போட்டோன்னு என்று சொல்கிறார். அது எல்லாத்தையும் வாங்கிட்டேன். நோத் இந்தியால நல்லா சேல் ஆகிச்சினு சொன்னாங்க என்று சொல்கிறார். இதனை கேட்டு வீட்டில் உள்ள அனைவரும் சிரிக்கிறார்கள்.


கோவத்தில் விஜயா அந்த போட்டோவை தூங்கி போட்டு விடுகிறார். அப்போது அங்கு வந்த அண்ணாமலை என்ன இது சாமி போட்டோவை கீழ போடுற என்று கேட்க அது சாமி இல்ல அப்பா அம்மான்னு சொல்கிறார் முத்து. அதனை பார்த்து அண்ணாமலையும் சிரிக்கிறார்.  உடனே விஜயா மீனாவை பார்த்து உன் தம்பி பண்ணுன வேலைக்கு ஊரே சிரிக்குது நீ என்னபார்த்து சிரிக்கிறியா என்று கேட்கிறார்.


நான் ஒன்னுமே பண்ணல என்று சொல்கிறார். இதனால் மீண்டும் வாக்குவாதம் போகிறது. இதனை பார்த்து கொண்டு இருந்த சுருதி இதற்கு காரணம் மீனா இல்ல நான் என்று சொல்கிறார். இதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். அன்றைக்கு ஆண்டி அப்படி இருந்ததை சோசியல் மீடியாவில் போட்டேன் அதைத்தான் யாரோ இப்படி பண்ணி இருக்காங்க என்று சொல்கிறார். 


முத்து உடனே இந்த மாதிரி ஐடியா நமக்கு தோணாம போச்சி இப்படி போட்டோ எடுத்து விற்றா நல்ல லாபம் பாக்கலாம் என்று சொல்கிறார். மனோஜும் இந்த போட்டோக்கு ஏதோ பவர் இருக்கு என்று சொல்கிறார். விஜய்யா மனோஜை திட்டி விட்டு போகிறார்.  மறுநாள் காலையில் கண்திருஷ்ட்டி போட்டோவுக்கு மனோஜ் கடை ஊழியர் பூ வைத்து வணங்குகிறார். அதனை பார்த்த மனோஜ் திட்டி அனுப்பி விடுகிறார். அப்போது ஒரு கால் வந்து நல்ல ஓடர் வருகிறது. கண்திருஷ்ட்டி போட்டோதான் காரணம் என்று மறுபடியும் அதனை அங்கேயே வைக்க சொல்கிறார் மனோஜ். 


பின்னர் மனோஜின்  நண்பர் வந்து வீடு ஒன்னு இருக்கு வாங்குங்க என்று கேட்கிறார் யோசிச்ச மனோஜ் ரோகிணி சரி என்று சொல்கிறார். எல்லாம் இந்த கண்திருஷ்ட்டி போட்டோ தான் காரணம் என்று விஜயா போட்டோவை கும்பிடுகிறார் மனோஜ். அடுத்த எபிசோட்டில் மீனாவை பொண்ணு கேட்டு அந்த நபர் அண்ணாமலை வீட்டுக்கு வந்து விடுகிறார். முத்து அண்ணே தான் ஐடியா கொடுத்தார் என்றும் சொல்கிறார் இதனை கேட்ட மீனா கடும் கோபத்தில் இருக்கிறார் நாளை சுவாரசியமான பகுதி இருக்கிறது. அதனை பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement