• Dec 25 2024

புஷ்பா 2 திரைப்படம் லீக்.. திரைத்துறைக்கு அதிர்ச்சி..!திருட்டுத் தளங்களில் கசியும் படம்..

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

2021ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் புஷ்பா: தி ரைஸ் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மற்றும் அல்லு அர்ஜுனுடன் தனஞ்சயா, ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதை, காட்சிகள், மற்றும் இசை என எல்லாத் துறைகளிலும் சிறப்பாக அமைந்துள்ள புஷ்பா 2, திரையுலக ரசிகர்களுக்கு திருவிழாவாக இருக்கிறது.


அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் தியேட்டர்களில் செம்ம புயலை கிளப்பிய புஷ்பா 2, அதன் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துவருகிறது. OTT வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நெட்பிலிக்ஸ் ரூ.270 கோடிக்கு இந்த திரைப்படத்தின் உரிமையை பெற்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால், படம் வெளியான சில மணிநேரங்களுக்குள் திருட்டுத் தளங்களில் புஷ்பா 2 கசிய ஆரம்பித்துள்ளது. HD, 1080p மற்றும் 240p என பல தரங்களில் இந்தப் படம் பிரபல டோரண்ட் தளங்களில் வெளிவந்துள்ளது. தமிழ்ராக்கர்ஸ், மூவிரூலெஸ், ஃபிலிம்ஜில்லா மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களில் இந்த திரைப்படம் காணப்படுகிறது.


சினிமா தயாரிப்பாளர்கள் திருட்டுத் தளங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ரசிகர்கள் படம் பார்த்து மகிழுவதற்கு சட்டவிரோத வழிகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


புஷ்பா 2 திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே அனுபவிக்க வேண்டிய விருந்தாக இருக்கிறது. படம் தியேட்டர்களில் ஓடிவருகிற நிலையில், OTT ரிலீஸுக்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. திரையரங்க அனுபவத்தை அனுபவிக்க முடியாதவர்கள் படத்தின் OTT வெளியீடு வரை காத்திருக்கும்படி திரையுலகினர் தற்போது வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement