• Apr 07 2025

ஹீரோவாக பட்டைய கிளப்பும் விஜயகாந்தின் இளைய மகன்..! படக்குழு வெளியிட்ட புதிய தகவல்!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களை விறுவிறுப்பாக இயக்குகின்ற திறமை மூலம் தனக்கென பெயர் பெற்ற இயக்குநர் பொன்ராம், தனது அடுத்த படமான ‘கொம்புசீவி’ மூலம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

2013ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தினூடாக, பொன்ராம் தன்னை நகைச்சுவை இயக்குநராக தமிழ் சினிமாவில் நிலைநிறுத்தினார். அதன் பின், ரஜினி முருகன், சீமராஜா , எம்.ஜி.ஆர் மகன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி வெற்றிப்பாதையை தன் பெயருடன் இணைத்து வைத்துள்ளார்.


பொன்ராமின் அடுத்த படம் கொம்புசீவியில் மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கின்றார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் புதிய முயற்சியில் இறங்கியிருக்கின்றார்.

'கொம்புசீவி' படத்திற்கு இசையமைக்கும் பெரும் பொறுப்பை யுவன் ஷங்கர் ராஜா ஏற்றுள்ளதுடன் தமிழ் சினிமாவில் யுவனின் இசை தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவரது இசை, துயரங்கள் , காதல் உணர்வு மற்றும் மக்களின் வாழ்வை ரசிக்கவைக்கும் தன்மை கொண்ட து. இப்பொழுது கொம்புசீவிக்கு யுவன் இசை என்பது படம் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.


'கொம்புசீவி' திரைப்படம் பொன்ராமின் வெற்றி தொடர்ச்சிக்கு ஒரு புதிய அடையாளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தனது புதிய அவதாரத்தில் ரசிகர்களை கவரப்போகின்றார் என்பதும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement