• Dec 27 2024

கோட் படத்தில் விஜகாந்த்தின் என்ட்ரி.. எத்தனை நிமிடங்கள் தெரியுமா? மாஸ் அப்டேட்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் விஜய் நடிக்கும் போதே அவரின் அடுத்த படத்திற்கு ஒப்பந்தமானார் இயக்குனர் வெங்கட் பிரபு. நடிகர் விஜயும் அதற்கு மறுப்பு தெரிவிக்காத நிலையில், தற்போது இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வருகின்றது.

வெங்கட் பிரபு இயக்கும் படத்திற்கு கோட் என பெயர் வைக்கப்பட்டுள்ளதோடு இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி என பல முன்னணி நட்சத்திரங்களும் மறைந்த நடிகர் விஜயகாந்தின் கட்சிகளும் இதில் இடம்பெறவுள்ளன. 

கோட் படத்தின் ஷூட்டிங் தாய்லாந்து, இந்தியா, ரஷ்யா, இலங்கை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. அண்மையில் தான் இதில் நடிக்கும் மைக் மோகன் இலங்கையில் ஷூட்டிங்கில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.


இந்த நிலையில் கோட் படத்தில் விஜயகாந்த் தொடர்பான காட்சிகள் எத்தனை நிமிடங்கள் ஒளிபரப்பாகும் என்று தகவல் தற்போது கசிந்து உள்ளது.

அதன்படி மறைந்த நடிகர் விஜயகாந்தின் காட்சிகள் சுமார் ஒன்றிலிருந்து ஒன்றரை நிமிடங்கள் வரை அதனோடு சம்பந்தப்பட்ட சீன்கள் படத்தில் இடம்பெரும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜயகாந்தின் தீவிர ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

Advertisement