• Dec 26 2024

விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு..? விலை எவ்வளவு தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக காணப்படும் நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளது. அதற்கு காரணம் அதற்கு விதிக்கப்பட்ட வரி தான் என கூறப்படுகின்றது.

2012 ஆம் ஆண்டு ஒரு புதிய  ரோல்ஸ் ராய்ஸ் கோர்ஸ் காரை வாங்கிய விஜய்க்கு 137% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய் இதற்கு முறையாக வரி செலுத்தவில்லை. இதனால் நீதிபதி அவருக்கு வரி ஒரு கட்டாய பங்களிப்பு என்று குறிப்பிட்டு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.


இந்த நிலையில்,  Empire Autos எனும் கார் டீலர்ஷிப்பில் விஜய் பயன்படுத்திய கார் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. குறித்த கார் இன்ஸ்டாகிராமில் படம் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்ட செய்தி தற்போது வைரலாகி வருகின்றது.


இந்த கார் தற்போது 2.6 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஆனாலும் இந்த காரின் விலை நிரந்தரம் கிடையாது வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளப்படும் எனவும் விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement