• Oct 26 2024

வைரலாகும் "வீர தீர சூரன்" படப்பிடிப்பு தள புகைப்படங்கள் !

Thisnugan / 2 months ago

Advertisement

Listen News!

எச்ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிப்பில் எஸ்.யு.அருண் குமார் எழுதி இயக்கி  விக்ரம் நடிபில் உருவாகி வரும் 'வீர தீர சூரன் -பகுதி 2' படத்தின் அறிவிப்பு அக்டோபர் 2023வெளியாகியிருந்தது. "தங்கலான்" ,'வீர தீர சூரன் -பகுதி 2'  என வெளியான அறிவிப்புகள் அடுத்தடுத்து  விக்ரம் ரசிகர்களுக்கு பெரு விருந்தாய் அமைந்தது.


விக்ரம் முன்னணி கதாபத்திரத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா,துஷாரா விஜயன் என தற்போதைய முன்னணி நட்சத்திரங்கள் இணைத்திருக்கும் இப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.சிலநாட்களுக்கு முன் டப்பிங் பணிகள் தொடங்கியிருந்த நிலையில் துஷாரா விஜயன் தனது டப்பிங் பணியை நிறைவு செய்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில் 'வீர தீர சூரன் -பகுதி 2' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இறுதி கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து எடுத்துக்கொண்ட படப்பிடிப்பு தள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன .


 

Advertisement