• Apr 17 2025

‘சிறகடிக்க ஆசை’ விகடன் நிறுவனத்திற்கு என்ன ஆச்சு? ராதிகாவுடன் சேர்ந்து சீரியலை நிறுத்த முடிவு..

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் முதன் முதலாக என்ட்ரியான விகடன் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரேடான் தயாரிப்பு நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களும் தாங்கள் தயாரித்துக் கொண்டிருந்த சீரியல்களை அடுத்தடுத்த நாட்களில் முடித்து கொள்ள முடிவு எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் விகடன் மற்றும் ரேடான் என்பது தெரிந்தது. விகடன் பத்திரிகையின் நிறுவனமான விகடன் தயாரிப்பு நிறுவனம் ஏராளமான சீரியல்களை சன் டிவிக்காக தயாரித்துள்ளது என்பதும் ஒரு சில சீரியல்கள் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது என்பது தெரிந்தது.

அதே போல் சன் டிவிக்காக பல சீரியல் களை தயாரித்த நிறுவனம் நடிகை ராதிகாவின் ரேடான் நிறுவனம் என்பதும் இந்த நிறுவனம் தயாரித்த தொலைக்காட்சி தொடர்கள் சினிமா போன்று பிரம்மாண்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் டிவி காக விகடன் தயாரித்த முதல் சீரியல் ’தமிழும் சரஸ்வதியும்’. இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த நிலையில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த சீரியல் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் ரேடான் நிறுவனம் விஜய் டிவிக்காக முதன் முதலாக  தயாரித்த சீரியல் ’கிழக்கு வாசல்’. இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வருவதாகவும் அடுத்த வாரம் சனிக்கிழமையுடன் இந்த சீரியல் முடிவடைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மொத்தத்தில் விகடன் மற்றும் ரேடான் ஆகிய இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் முதல் முதலாக விஜய் டிவிக்கு தயாரித்த தொலைக்காட்சி தொடர்கள் அடுத்தடுத்த நாட்களில் முடிவது கவனிக்கத்தக்க ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் விகடன் நிறுவனம் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலை தயாரித்து வருகிறது என்பதும் இந்த சீரியல் இன்னும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement