• Dec 26 2024

லோகியை அடுத்து ஸ்ருதிஹாசனை புரட்ட தயாராகும் சியான் விக்ரம்.. சூப்பர் அறிவிப்பு..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் ஸ்ருதிஹாசன் நடித்தஇனிமேல்என்ற ஆல்பத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடலின் முழுமையான வடிவம் மார்ச் 25ஆம் தேதி வெளியாக உள்ளது என்ற அறிவிப்பையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த டீசரில் ஸ்ருதிஹாசனை லோகேஷ் கனகராஜ் புரட்டி எடுத்திருந்த காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்கள் கேலியும் கிண்டலும் செய்தார்கள் என்பதும் அதுமட்டுமின்றி அவரதுவிக்ரம்படத்தில் நடித்த நடிகை காயத்ரி கூட தனது அதிருப்தியான பதிவை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஸ்ருதிஹாசன், விக்ரம் நடிக்க இருக்கும் 62வது படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ’சியான் 62’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும்சித்தாஇயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக தயாரிப்பாளர் ரியாசிபு என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த பதிவின் கமெண்டில் ரசிகர்கள் விக்ரம் ஜோடியாக ஸ்ருதிஹாசனை நடிக்க வையுங்கள் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அந்த கோரிக்கையை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் எனவே லோகியை அடுத்து ஸ்ருதியை புரட்ட விக்ரமும் தயாராகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement