• Dec 26 2024

லோகேஷ் உடன் சண்டை போட்டுவிட்டு மரத்தை கட்டிப்பிடித்த காயத்ரி.. துருக்கியில் நடந்த சம்பவம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்தஇனிமேல்என்ற ஆல்பம் வெளியான நிலையில் அந்த ஆல்பத்திற்கு கமெண்ட் செய்திருந்த நடிகை காயத்ரிநாங்கள் காதலித்தால் மட்டும் தலையை வெட்டிவிட்டு, நீங்கள் மட்டும் ரொமான்ஸ் செய்திருக்கிறீர்கள்என்று செல்ல சண்டை போட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகை காயத்ரி துருக்கி சுற்றுப்பயணம் செய்திருக்கும் நிலையில் அங்கிருந்து கொண்டே பதிவு செய்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை காயத்ரி ’18 வயசுஎன்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனாலும்நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்என்ற திரைப்படத்தின் மூலம் தான் பிரபலமானார். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்தரம்மி’ ’புரியாத புதிர்’ ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ’சீதக்காதி’ ’சூப்பர் டீலக்ஸ்’ ’துக்ளக் தர்பார்’ ’விக்ரம்உள்பட பல படங்களில் நடித்தார் என்பதும் தற்போது கூட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் காயத்ரி அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் சுற்றுப்பயணம் குறித்த புகைப்படங்களையும் பதிவு செய்து வரும் நிலையில் தற்போது அவர் துருக்கி சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

அதில் பழமையான இடங்களில் உட்கார்ந்து இருப்பது போன்ற புகைப்படங்கள், மரத்தை கட்டி பிடித்து மெய் மறந்து நிற்கும் புகைப்படம், அருவிகள் மற்றும் அழகிய புகைப்படங்கள், நாயுடன் அன்பை காட்டும் புகைப்படம் உட்பட பல புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement