• Dec 29 2024

ஹிட் ஆகாத விக்ரமன் மகன் நடித்த ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படம்.. போஸ்டர் செலவு கூட வசூல் இல்லையா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நடிப்பில் உருவான ‘ஹிட் லிஸ்ட்’என்ற திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் வெறும் ரூ.20 லட்சம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் உள்பட பல பிரபலங்கள் நடிப்பில் உருவான ஹிட் படங்களை இயக்கியவர் விக்ரமன். இவர் தனது மகன் விஜய் கனிஷ்காவை ஹீரோவாக அறிமுகம் செய்த நிலையில் இந்த படத்திற்கு ‘ஹிட் லிஸ்ட்’என்ற பெயர் வைக்கப்பட்டது என்பதும் கேஎஸ் ரவிகுமார் இந்த படத்தை தயாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சரத்குமார், கௌதம் மேனன், ஐஸ்வர்யா தத்தா உள்பட பலர் நடித்திருந்த நிலையில் இந்த படத்தை ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி உட்பட பலர் ப்ரமோஷன் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த படம் வெளியான நிலையில் தமிழகம் முழுவதும் இந்த படம் வெறும் 20 லட்ச ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தெரிகிறது. ஆக்சன் கலந்த திரில்லர் படமாக இருந்தாலும் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் யாரும் முன் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்காக செய்த போஸ்டர் செலவு கூட இந்த படத்தின் மொத்த வசூல் இருக்காது என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement