• Jan 27 2025

விக்ரம் பட இயக்குநர் திடீர் மறைவு..!! தென்னிந்திய திரையுலகினருக்கு பேரதிர்ச்சி

Aathira / 21 hours ago

Advertisement

Listen News!

1995 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான 'ஆதியத்தே  கண்மணி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இயக்குநர் ஷஃபி. இதைத்தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை எழுதி இயக்கி உள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு 'ஒன் மேன் ஷோ' என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராகவும் அறிமுகமானார். இவர் இயக்கும் படங்களில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இவர் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான மஜா படத்தையும் இயக்கியுள்ளார்.

d_i_a

இந்த நிலையில், மலையாளத்தில் பிரபல இயக்குநராக காணப்படும் ஷஃபி இன்றைய தினம் தனது 56 வது வயதில் உயிரிழந்து உள்ளார். இவருடைய மறைவு மலையாள சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமா பிரபலங்களுக்கும் அதிர்ச்சியாக  காணப்படுகிறது. தற்போது அவருடைய மறைவுக்கு பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.


இயக்குநர் ஷஃபிக்கு பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவ்வாறான நிலையிலே அவர் நேற்று இரவு 12.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜனவரி 16ஆம் திகதியில் இருந்து அவருக்கு செயற்கையாக சுவாச கருவி உதவியுடன் தான் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement