• Apr 18 2025

பிக் பாஸ் விஷாலுக்கு அன்ஷிதா மீது காதலா? - உண்மையை உடைத்த விஷால்

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தற்பொழுது விஜய் டீவியில் பிக் பாஸ் சீசன் 8 ஒளிபரப்பப்பட்டு  இருந்தது. அந்நிகழ்வில் ரயான் , செளந்தர்யா , ஜாக்லின் , பவித்திரா மற்றும் விஷால் என 23 போட்டியாளர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் அதிகளவு  வரவேற்பையும்  பெற்றிருந்தது.  

அந்த நிகழ்ச்சி தற்போது நிறைவாகி உள்ள நிலையில் அதில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் அனைவரும்  ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர். அவர்கள்  பேட்டியில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போது அங்கு நடந்த விடயங்களை பகிர்ந்து வருகின்றனர்.


அந்த வகையில் தற்பொழுது விஷால் ஊடகம் ஒன்றில் கொடுத்த பேட்டி வெளியாகி  உள்ளது. அதில் அன்ஷிதா பற்றி நடுவர் கேட்ட போது அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.அத்துடன் அன்ஷிதா  தனக்கு நெருக்கமான friend எனக் குறிப்பிட்டார் விஷால். மேலும்  தன்னுடன் தர்ஷிகாவை விட அன்ஷிதா மிகவும் நெருக்கமாக பழகியதாக கூறினார். அத்துடன் தங்களுக்கு இடையில் காதல் இல்லை நட்பு மட்டும் தான் என்றார்.

Advertisement

Advertisement