• Dec 26 2024

விஷாலுக்கு மனு நிரப்பவே தெரியாது.. இதவிட அசிங்கம் இருக்கா? வச்சு பொளக்கும் பயில்வான்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய தனிப்பட்ட விவகாரங்களை பேசி பிரபலமானவர் தான் பயில்வான் ரங்கநாதன். பலர் இவரை இதற்காகவே எதிர்த்து வருகின்றார்கள். சிலர் நேரடியாகவே சண்டைக்கும் சென்றுள்ளார்கள். ஆனாலும் அவர் திருந்துவதாக இல்லை.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விஷால் நடித்த ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பயில்வான் கேள்வி எழுப்ப, பயில்வான் கேட்கும் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என விஷால் விரட்டி விட்ட நிலையில், அவர் அங்கிருந்து உடனடியாகவே புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில், தற்போது பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் விஷால் பற்றிய பல தகவல்களை அடுக்கடுக்காக தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.


அதன்படி அவர் கூறுகையில், விஷாலுக்கு ஒழுங்காக மனு நிரப்பவே தெரியாது. அவர் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடுகின்றேன் என மனு நிரப்பி கொடுத்துள்ளார். அந்த மனுவை பார்த்த அதிகாரிகள், இது சரியாக இல்லை என நிராகரித்தே விட்டார்கள். இதற்கு மேல் வேறு என்ன அசிங்கம் வேண்டும்.

மேலும் விஷாலுக்கு சினிமாவில் ரசிகர்களை கிடையாது. அவர் நடிச்ச படங்கள் எல்லாமே தோல்வியை தான் தழுவின. அதற்குப் பின்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆனார் அதிலும் பிரச்சனை. நடிகர் சங்கத் தலைவர் ஆனார். பல நடிகர்கள் கோடி கணக்கில் பணம் கொடுத்தும் இன்னும் அந்த கட்டிடத்தை கட்டாமல் இருக்கிறார். எதிலும் அவர் சாதித்ததாகவே இல்லை. அரசியலுக்கு வரவேண்டும் என்றால் குறைந்த ரசிகர்கள் ஆவது இருக்க வேண்டும். விஷால் படம் நல்லா இல்லனா யாராவது பார்ப்பாங்களா? என விஷாலை கொட்டி தீர்த்துள்ளார் பயில்வான்.

Advertisement

Advertisement