சோசியல் மீடியாவில் சமீபத்தில் ட்ரெண்டாகிய வி.ஜே அபிநயா சமீபத்திய பேட்டியில் "தன்னை எல்லோரும் பீரோ அக்கானு சொல்லுறாங்க ஆனா நான் அப்படி கிடையாது என்னுடைய லைப் ஸ்டைல் வேற" என்று ஓபனாக பேசியுள்ளார்
சமீபகாலமாக சோசியல் மீடியாவில் எதாவது செய்து பிரபலம் ஆகவேண்டும் என்று பலர் துடித்து கொண்டிருப்பார்கள். அப்படி இருக்க விஜே அபிநயா என்று சொன்னால் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஒரு ரீல்ஸ் மூலம் பீரோ இல்லை பேக்ன்னு சொல்லுங்க என்று சொல்லி தற்போது பீரோஅக்கா என்று ட்ரெண்டாகி விட்டார் அபிநயா. இது குறித்து தொகுப்பாளினி கேட்டதற்கு அவர் இவ்வாறு பதில் அளித்திருந்தார்.
அவர் கூறுகையில் "இன்ஸ்டாகிராமில் பல இளம் பெண்கள் பிரபலம் அடைகிறோம் என்கிற பெயரில் சீரழிந்து மற்ற இளைஞர்களையும் சீரழிக்கிறாங்க.நான் அப்படிப்பட்ட பெண்னெல்லாம் கிடையாது. தனக்கென ஒரு லிமிட் இருக்கு. சமீபகாலமா டெய்லர் அக்கா, பலூன் அக்கா, ஜிம் அக்கா லேட்டஸ்ட்டாக பீரோ அக்கா என அக்கா எனும் புனிதமான சொல்லுக்கே களங்கம் விளைவிக்கும் விதமாக பலர் உருவாகி வருகிறார்கள். நெஞ்சுக்கு மேல் வரை கேமரா காட்டி ரீல்ஸ் போட்டு வந்தேன். ஒருத்தனும் கண்டுக்கவில்லை. அதன் பின்னர் கேமராவை கீழே வரை இறக்கியதும் ரீல்ஸ் அதிக வியூஸ்களை அள்ளி வருகிறது. ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து தற்போது இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சராக மாறிவிட்டேன் என்று கூறினார்.
மேலும் " நான் ரொம்பவே பக்தி மயமான பெண் என்றும் பணம் சம்பாதிக்க மட்டுமே ரீல்ஸ் போடுகிறேன். மற்றபடி எப்போதுமே கோயில்களுக்குச் சென்று சாமி கும்பிடுவேன், ரொம்பவே பக்தியான பெண் ரொம்ப நல்லா படிக்கிற பெண் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஜீன்ஸ் போட்டாலே எங்கம்மா வெளக்கமாத்தால அடிப்பின்னிடுவாங்க. ஆனால், இப்போ எல்லாமே மாறிடுச்சு. என்னை விட மோசமாக பாத் டவலை கழட்டி காட்டி எல்லாம் ரீல்ஸ் போடுறாங்க என்று பேசியுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Listen News!