பிக்பாஸ் சீசன் 8ல் ஹாஸ்ட் ஆக களம் இறங்கியவர் தான் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் இவருக்கு எதிராக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. ஆனாலும் அதையெல்லாம் தனது முதல் ஷோவிலையே தவிடு பொடி ஆக்கி இருந்தார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதி சேனல் தரப்பில் சொல்வதை மட்டும் தான் செய்கின்றார் என புதிய தகவல் ஒன்று வைரலாகி உள்ளது. மேலும் அதனை அவரே பல தடவை பிக்பாஸ் மேடையில் மறைமுகமாக சாடி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் எபிசோட்டை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் காத்திருப்பார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் விஜய் சேதுபதி சொல்லும் கருத்துக்களுக்கும், அவர் போட்டியாளர்களை வெளுத்து வாங்கும் ஸ்டைலும் ரசிகர்களுக்கு பிடித்தது.
ஆனாலும் நாளடைவில் அவர் போட்டியாளர்களை பேசவிடாமல் அவர்களை அசிங்கப்படுத்துவது போல சில சம்பவங்கள் நடைபெற்றது. இது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் ஏனைய போட்டியாளர்களை வெளுத்து வாங்கும் விஜய் சேதுபதி சௌந்தர்யாவை மட்டும் கேள்வி கேட்பது இல்லை. அவரிடம் அளவாக பேசுவதோடு மட்டுமில்லாமல் அவர் செய்யும் சேட்டைகளுக்கு எந்தவித ஆக்ஷனும் எடுக்காதவராக காணப்படுகின்றார். ஆனால் கமல்ஹாசன் அவ்வாறு இல்லை என ரசிகர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.
அத்துடன் விஜய் சேதுபதி சேனல் தரப்பில் எழுதிக் கொடுக்கும் ஸ்கிரிப்ட் வாசிப்பது போலவே செயற்படுகின்றார். அதிலும் அவர் தான் ரவியை அனுப்பாதீங்கன்னு சொன்னன் அனுப்பிட்டாங்க.. ஆனந்திக்கு என்ன வோட்டிங் என்று கேட்டேன் சொல்லவில்லை.. குறும்படம் போடச் சொன்னேன் போடவில்லை.. என்று சில சம்பவங்களை பிக் பாஸ் மேடையில் தெரிவித்து இருப்பார்.
இதன் மூலம் விஜய் சேதுபதி சேனல் தரப்பில் சொல்வதை மட்டும் தான் செய்கின்றார் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!