• Dec 25 2024

அர்ச்சனாவுக்கு எகிறும் ஓட்டுகள்.. கச்சிதமாக வேலையை முடித்த ஜோவிகா! வனிதாவின் ட்ரைனிங் மண்ணா போச்சா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இன்னும் இரண்டு நாட்களில் முடிவுக்கு வரவுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 ற்கான டைட்டில் வின்னர் போட்டிஅர்ச்சனா மற்றும் மாயா இடையே தான் உள்ளது. அர்ச்சனா மற்றும் மாயா இருவரும் ஆரம்பத்தில் இருந்தே மோதிக்கொண்டு வந்தனர்.

எனினும், இடையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து பூர்ணிமா எலிமினேட் ஆன பிறகு இருவரும் சமரசம் ஆகி ஒன்றாக இருந்தனர்.


தற்போது கடைசி வாரத்தில் பழைய போட்டியாளர்கள் மொத்த பேரும் வீட்டுக்குள் மீண்டும் வந்திருக்கின்றனர். 

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஜோவிகா, மாயாவை தூண்டிவிட்டு மீண்டும் அர்ச்சனாவை பற்றி தவறாக பேசி சண்டை போட வைத்திருக்கிறார்.

இந்த சம்பவத்தால் அர்ச்சனாவுக்கு தான் இப்போது அதிகம் வாக்குகள் வர தொடங்கி இருக்கிறது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 

இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா, மாயாவின் நட்பு வேணும் என்று பரிதவிப்பதையும் பார்க்கலாம்.

Advertisement

Advertisement