• Dec 26 2024

கணேஷுக்கு மரண பயத்தைக் காட்டிய எழில்! நிலாவை வெறுக்கும் ஈஸ்வரி! செழியன் மீது விழுந்த அப்பட்டமான குற்றச்சாட்டு

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா வீட்டில் வக்கீல் வந்து இருக்க, அவரிடம் பேசிய ஈஸ்வரி, செழியன் மீது உள்ள கேஸ்களை கேட்டு கோவப்படுகிறார். அதன்படி, ஜெனியை செழியன் அடித்து துன்புறுத்தியதாக ஜெனியின் பக்கம் இருந்து கேஸ் கொடுத்து இருப்பதாக சொல்ல, ஜெனி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் ஈஸ்வரி. எனினும், செழியனும், பாக்கியாவும் நாங்க எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்க போவதில்லை, ஜெனியை தப்பா பேச மாட்டன் என சொல்லுகிறார். 


மேலும் கோவப்பட்ட ஈஸ்வரி, அப்போ டைவோஸ் தான். ஆனா குழந்தை எங்க பக்கம் வரணும் என வக்கீலிடம் சொல்லிவிட்டு, செழியனுக்கும் பாக்கியாவுக்கும் திட்டிவிட்டு போகிறார்.


மறுபக்கம், எழிலும் அமிர்தா, நிலா மூவரும் கோவிலுக்கு போக, அங்கு கணேஷ் ஒளிந்து நின்று அவர்களை கண்காணிக்கின்றார். இதை பார்த்த எழில், என்ன எங்களை போல்வ் பண்ணுறீயா? உனக்கு பயப்பட போற இல்லை, அவங்க இரண்டு பேரும் என் கூட தான் இருப்பாங்க பாரு. இன்னொரு தடவை உன்ன இப்படி பார்த்தா குழி தோண்டி புதைச்சிடுவன் என கணேஷை மிரட்டி போகிறார்.


இன்னொரு பக்கம் ஏன் என்ன பிக்கப் பண்ண வரல என ராதிகா கேட்க, ஆபிஸ்ல மீட்டிங் என சமாளிக்க, ராதிகா கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இதன் போது நான் ஆபிஸ் வந்தன் என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். எனினும் எதோ காரணம் சொல்லி ராதிகாவை சமாதானம் செய்கிறார் கோபி.


ஈஸ்வரியை நிலா விளையாட வருமாறு அழைக்க அதை தவிர்க்கிறார் ஈஸ்வரி. மேலும் அமிர்தாவை கூப்பிட்டு நிலா கூட விளையாடுமாறு சொல்லுகிறார். இப்போ பாட்டி பாட்டி என்று பாசம் காட்டிட்டு அப்புறம் பாதிலையே என்ன விட்டு போனா என்னால தாங்க முடியாது என சொல்லுகிறார். இது தான் இன்றைய எபிசோட். 


Advertisement

Advertisement