• Dec 26 2024

முந்தைய ரிலேஷன்ஷிப்ல உண்மையா இருந்தேன்.. ஆனா அவங்க..? நயன் ஓபன் டாக்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

கேரளாவில் பிறந்து மலையாள சினிமாவின் மூலம் திரைத்துறைக்குள் அறிமுகமானவர் தான் நயன்தாரா. இவர் தமிழில் முதல் முறையாக நடித்த திரைப்படம் தான் ஐயா. அதில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தனது முதலாவது படத்தின் மூலமே ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திருந்தார்.

ஐயா படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதில் நயன்தாராவின் பெயரும் பிரபலம் ஆனது. அதன் பின்பு ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் ஹீரோயினாக நடித்தார். சந்திரமுகி திரைப்படம் ஹிட் அடித்தது. இதனால் நயன்தாராவுக்கு வரிசையாக தமிழில் வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய், அஜித், சிம்பு, தனுஷ் என பலருடனும் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.

வல்லவன் படத்தில் நடிக்கும் போது சிம்புவுடன் காதலில் விழுந்தார். இவர்கள் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களுடைய காதல் பாதியிலே முடிந்தது. அதற்கு காரணம் சிம்புவுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டது தான் என்று கூறப்பட்டது.

d_i_a

அதன் பிறகு சிங்கிளாக இருந்த நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தார். அதுவும் பாதியில் முடிந்தது. இப்படி இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார். இதனால் பலரும் பல விமர்சனங்களை முன்வைத்தார்கள். தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.


இந்த நிலையில், நயன்தாரா பற்றிய ஆவணப்படம் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. அதில் நயன்தாராவின் தாய் தந்தையை அறிமுகப்படுத்தி  உள்ளதோடு தனது முந்தைய காதல் பற்றியும் மனம் திறந்து பேசி உள்ளார் நயன்.

அதன்படி அவர் கூறுகையில், என்னுடைய முதல் காதல் முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் இருந்தது. அது இருவருக்கும் இடையே நல்ல ரிலேஷன்ஷிப்பை வைத்திருக்கும். காதலை தாண்டி நம்பிக்கை வேண்டும். எதிரில் இருப்பவர் நம்மை முழுசா காதலிக்கிறார் என்பதை நம்ப வேண்டும். நான் அப்படித்தான் இருந்தேன். என்னுடைய முந்தைய காதல் பற்றி இதுவரை பேசியது இல்லை. நிறைய விஷயங்களை எல்லோரும் அவர்களாகவே நினைத்துக் கொள்வார்கள்.

எந்த கதையை நம்ப வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றார்களோ அதைத்தான் அவர்கள் நம்புவார்கள். அந்த கதை எல்லாமே ரொம்ப மோசம். என்னுடைய மனசை காயப்படுத்தியது என்னவென்றால், என்ன நடந்தது என்பதை விசாரிக்காமல் என்னை பற்றிய பேச்சுக்களில் அவர்களாகவே ஒன்றை நினைத்தது தான். இன்று வரை எனது ரிலேஷன்ஷிப்பில் சம்பந்தப்பட்ட ஆண்களிடம் நீங்கள் ஏன் இதை செய்தீர்கள் உண்மையில் என்ன நடந்தது என்று யாருமே கேட்டதில்லை. எப்போதும் ஒரு பெண்ணை மட்டும் தான் கேட்பார்கள் இது நியாயமே இல்லை என நயன்தாரா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement