• Dec 27 2024

முதன் முறையாக விஜகுமாரின் பெயரை காப்பாற்றிய வனிதா? அமோக வரவேற்பாம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறைகளை கடந்த பழம்பெரும்  நடிகராக காணப்படுபவர் தான் விஜயகுமார். இவரை தொடர்ந்து  இவரது மகன் நான் அருண் விஜயையும் அவரது பேரனும் படத்தில் நடித்து வருகிறார்கள்.

விஜயகுமார் குடும்பத்திற்கு என்றே தனி மரியாதை காணப்படுகின்றது. இவரது குடும்பத்தில் இருந்து எட்டு பேர் நடித்து உள்ளார்கள். எல்லாரும் குடும்பமாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தாலும் மஞ்சுளாவின் மூத்த மகளான வனிதா இவர்களது குடும்பத்திற்கு விதிவிலக்காக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனியாக வாழ்ந்து வரும் வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்குப் பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அவரை தேடி குவிய தொடங்கின. கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார் வனிதா விஜயகுமார்.


இந்த நிலையில்,  இவர் நடிப்பில் இறுதியாக வெளியான தண்டுபாளையம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றுள்ளது. அந்தப் படத்தில் வனிதா உடன் சோனியா அகர்வால் நடித்துள்ளார். இதன் போது வனிதா கூறுகையில்,


தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு குறைவாகவே காணப்படுகின்றது. கடந்த காலத்தில் இருந்தது போல இப்போது இல்லை. எனது அப்பா நடிக்கும் காலத்தில் இருந்து இப்போது வரை பார்த்து வருகின்றேன்.  அப்போது  அவர் நடிக்கும் கேரக்டர்களை பார்க்கும்போது மிகவும் பிரம்மிப்பாக இருக்கும்.  ஆனால் இந்த கால சினிமா அவ்வாறு இல்லை என குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், என் அப்பா படங்களின் வரிசையில் என்னுடைய இந்த படத்தையும் இயக்குனர்கள் பாராட்டி கூறியது மிகப்பெரிய சந்தோஷத்தை எனக்கு ஏற்படுத்தியது என வனிதா கூறினார்.


Advertisement

Advertisement