• Jun 12 2026

பாலகிருஷ்ணா தள்ளும் போது அவ ரியாக்‌ஷன பாருங்க.. அஞ்சலியை வெளுத்து வாங்கிய சின்மயி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் பேமஸான நடிகையாக திகழ்பவர் தான் நடிகை அஞ்சலி. இவர் நடித்த கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலகிருஷ்ணா அஞ்சலியை தள்ளிவிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் அஞ்சலி. அதற்குப் பிறகு இவர் நடித்த படங்கள் பாதி வெற்றியையும், பாதி தோல்வியையும் சந்தித்தன. ஆனாலும் இவரது நடிப்பிற்கு குறைவில்லை. அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.

தற்போது நடிகை அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளிவிட்ட விடயம் பூகம்பமானதை அடுத்து அஞ்சலி தனது எக்ஸ் தள பக்கத்தில், பாலகிருஷ்ணாவும் நானும் பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் மதித்து வருகின்றோம். அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டது எங்களுக்கு மிகவும் சந்தோஷம். அவருடன் நான் மேடையை பகிர்ந்து கொண்டதில் பெருமைப்படுகிறேன் என்று இந்த பஞ்சாயத்துக்கு என்ட் கார்ட் போட்டிருந்தார்.


இந்த நிலையில், தற்போது பாடகி சின்மயி தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பில் ட்விட் போட்டுள்ளார். அதில் அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படி எல்லாம் நடந்து கொள்கின்றீர்கள் என்ற ரீதியில் மேலும் மக்களிடம் இதை பகிர்வதினால் நான் கவனிக்க மிகப்பெரிய பிரச்சனைகள் ஒன்றுதான் அஞ்சலி சிரிப்பதை பாருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement