• Dec 29 2024

கேரவனில் டிரஸ் மாத்துற வீடியோவை பார்த்து கூட்டமா சிரிச்சாங்க.! ராதிகா போட்டுடைத்த உண்மை

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்ததை தொடர்ந்து ஒட்டுமொத்த திரையுலகமே பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளது.

மலையாள சினிமா பல வெற்றி படங்களை கொடுத்த நிலையில் தற்போது ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதில் இருந்து தலை குனிந்து உள்ளது. தற்போது குறித்த கமிஷன் முன்பு பல பெண்கள் நேரில் வந்து புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த நிலையில், நடிகர் ராதிகா சரத்குமார் கேரவனில் ரகசிய கேமராவை வைத்து நடிகைகள் உடைமாற்றுவதை பார்த்து நடிகர்கள் ரசிப்பதாக அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், நடிகைகளுக்கு உடல் ரீதியான தொல்லை கொடுப்பது மலையாள சினிமாவில் மட்டுமில்லை தமிழ், தெலுங்கு,இந்தி என அனைத்து துறையிலும் உள்ளது. பெண்கள் விரும்பி காதலிக்கிறார்கள் என்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் பட வாய்ப்புக்காக அவர்களை கட்டாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரை பெண்கள் தான் குரல் கொடுத்து இருக்கின்றார்கள். ஆண் நடிகர்கள் யாரும் இது தொடர்பில் வாய் திறக்கவே இல்லை.


மலையாள படப்பிடிப்பு ஒன்றின் போது அங்கிருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் அதைப் பார்த்து கடந்து சென்று விட்டேன். அதன் பின்பு அதை விசாரித்த போது அவர்கள் கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து நடிகைகள் உடைமாற்றுவதை பார்த்து ரசித்தார்கள் என்பது எனக்கு தெரிய வந்தது. இதனால் நான் பயந்து போய் கேரவனில் உடைகளை மாற்றாமல் ஹோட்டல் அரைக்கு சென்று தான் உடைகளை மாற்றினேன். இது தொடர்பில் சக நடிகைகளுக்கும் சொல்லி எச்சரித்தேன்.

இதை அடுத்து ஆட்களை அழைத்து செருப்பால் அடிப்பேன் கேரவனில் கேமரா வந்தால் அவ்வளவுதான் என சொன்னேன். அது எந்த படப்பிடிப்பு என்று நான் சொல்ல விரும்பவில்லை. அந்த நடிகை உடைமாற்றும் வீடியோ தற்போதும்  இணையத்தில் பெயரோடு வருகின்றது. சினிமாவில் சிஸ்டமே தவறாக உள்ளது. சினிமாவை பற்றி சொல்லுவது நம்மைப் பார்த்து நாமே துப்பிக் கொள்வதற்கு சமம் என்று அந்தப் பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement