• Apr 24 2026

10 பேருக்கு பிடிச்சா போதும்னு எடுத்தோம்! ஆனா நடந்தது வேற.. நடிகர் சித்தார்த்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான முயற்சிகளுக்கு பெயர்பெற்ற நடிகர் சித்தார்த், சமீபத்திய ஒரு நேர்காணலில் தனது கரியரில் முக்கியமான படமாக திகழும் ஜில் ஜங் ஜக் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படம் குறித்து அவர் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


அதன்போது, “ஜில் ஜங் ஜக் எங்கள பொறுத்த வரை ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம். எங்களுக்கு நல்ல லாபம் கொடுத்துச்சு. அந்தப் படத்தை 1000 பேர்ல கொஞ்சப் பேருக்கு புடிச்சா போதும்னு எடுக்கல; ஒரு 10 பேருக்கு ரொம்ப புடிச்சா போதும்னு எடுத்த படம். அந்தப் 10 பேருக்கு அந்தப் படம் ரொம்ப புடிச்சிருந்தது,” என சித்தார்த் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “அந்தப் படத்தை கொஞ்சத் தியேட்டரில தான் வெளியிட்டோம். நான் எதிர்பார்த்த வசூல் வந்திச்சு. ஆனா, இப்ப அந்தப் படத்தை ரொம்ப பேர் பாராட்டுறாங்க. OTTல வந்தாலும் கூட நல்லா இருக்கும்னு சொல்லுறாங்க.”என்றார்.

ஜில் ஜங் ஜக் திரைப்படம் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை இயக்கியவர் தீரஜ் வைத்தி. அதிரடி நகைச்சுவைத் தன்மையில் உருவான இந்த படம், தமிழ் சினிமாவில் வழக்கமாக பார்க்கப்படும் கதைக்களங்களிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையுடன் வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement