• Apr 24 2026

'வடம்' படத்தின் அதிரடியான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.! என்ன தெரியுமா.?

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘வடம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை (பிப்ரவரி 21) வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியவுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் கேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். கிராமத்து கதாபாத்திரங்களிலும், இயல்பான நடிப்பிலும் தனித்துவம் கொண்ட விமல், இந்த படத்தில் முற்றிலும் புதிய பரிமாணத்தில் தோன்றுவார் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. அவரது கதாபாத்திரம் ஆழமான உணர்வுகளும், தீவிரமான சூழ்நிலைகளும் நிரம்பியதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த படத்தில் நடிகை சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார். விமல் – சங்கீதா இணைப்பு திரையில் புதிய ரசனைக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு சுவாரஸ்யமான கூட்டணியாக பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு இசையமைத்துள்ளவர் பிரபல இசையமைப்பாளர் டி. இமான். 


இந்நிலையில், நாளை வெளியாகவுள்ள ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement