• Dec 27 2024

பிரதீப் யாரென்று இன்னும் சில வாரங்களில் தெரியும்! பிக் பாஸ் வீட்டில் எதிர்பாராத திருப்புமுனை?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டவுள்ளது. அதன்படி, இன்னும் சில வாரங்களில் பேமிலி ரவுண்டு வரவுள்ளதால் எதிர்பாராத சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் பேமிலி ரவுண்டு செல்லவுள்ளது. இதன் போது வெளியே இருந்து வரும் போட்டியாளர்களின் உறவினர்கள் பிரதீப் குறித்து பேசுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.


பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து பிரதீப் முக்கிய போட்டியாளராக காணப்பட்டு வந்தார். அவரே இறுதி வரை செல்லுவார் எனவும் அவருக்கே டைட்டில் கிடைக்கும் எனவும் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்த மாயா பூர்ணிமா குரூப், அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை வெளியேற்றிவிட்டது. ஆனாலும் பிரதீப் வெளியே வந்த பின் மேலும் அவருக்கு ஆதரவு பெருகியது.

இவ்வாறான நிலையில், மாயா, பூர்ணிமாவும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும் இன்னும் பிரதீப் வெளியே டிரெண்டிங்கில் இருப்பது தெரியாமல் தாங்கள் செய்தது சரி என எண்ணிக் கொண்டுள்ளனர்.


எனினும், இன்னும் ஒரு சில வாரங்களில் பேமிலி ரவுண்டு வரும்போது உள்ளே வரும் போட்டியாளர்களின் உறவினர்கள் வெளியே பிரதீப்புக்கு எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறது, பிரதீப் எந்த அளவுக்கு ட்ரெண்டிங்கில் இருக்கிறார் என்பதை சொல்ல வாய்ப்பு இருக்கிறது. 

எனவே பேமிலி ரவுண்டுக்கு பின்னர் போட்டியாளர்களின் விளையாட்டில் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Advertisement

Advertisement