• Apr 26 2026

களைகட்டிய ஸ்ருதி வீட்டு பங்க்ஷன்.. முத்துவின் எல்லை மீறிய ஆட்டம்! அதுல விஜயாவ பாத்தீங்களா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் காணப்படுகிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பாக செல்கிறது. அதற்கு காரணம் முத்துவை சுற்றி நடக்கும் சூழ்ச்சி தான்.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக காணப்படுவது முத்துவும் மீனாவும் தான். இந்த இரு கதாபாத்திரங்களும் சாதாரண வாழ்க்கைக்கு ஏற்ப, அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், சந்தோஷங்கள், திருப்பங்கள், தந்திரங்கள் என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்கிறது.

இந்த சீரியலில் தற்போது ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடக்க உள்ளது. அதில் ரோகினிக்கும் தாலி பிரித்து கோர்க்க ஏற்பாடு செய்த விஜயா, அதற்கு கட்டாயமாக ரோகிணியின் அப்பபா வரவேண்டும் என கண்டிஷன் போடுகிறார்.


மறுபக்கம் இந்த பங்ஷன் நடந்து முடிவதற்குள் முத்துவை வைத்து பிரச்சினை பண்ணி ஸ்ருதி, ரவியை அவர் குடும்பத்தில் இருந்து  பிரித்து நம்முடன் கூட்டிப் போக வேண்டும் என்ற நோக்கில் ஸ்ருதியின் அம்மா, அப்பா சதி செய்கிறார்கள்.

அதைப்போலவே ரோகிணியும் முத்துவை தூண்டிவிட்டு, அவராவே பிரச்சினை பண்ணுவதற்குரிய வழிகளை இன்னொருவர் மூலம் திட்டமிட்டு காய் நகர்த்துகிறார். 

இவ்வாறு இவர்களுடைய சதியில் சிக்கிக் கொள்வாரா முத்து? இதனை எப்படி கையாள போகிறார் என்ற கேள்விகள் ரசிகர்கள் மனதிற்குள் குழப்பமாக எழுந்துள்ளன.

இந்த நிலையில், தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் சிறகடிக்க ஆசை பிரபலங்கள்.

அதில் ஒவ்வொருவரும் ஜோடி ஜோடியாக வரும் காட்சிகள் பார்ப்போருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement