• Dec 25 2024

பாலாவுக்கு இப்படியொரு ரசிகனா? பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட ஸ்பெஷல் பைக்! நெகிழ்ச்சி சம்பவம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் KPY பாலா. இவர் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமை மூலம் பேசப்பட்டவர்.

டிவி மட்டுமின்றி youtube சேனல் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், கோவில் திருவிழாக்கள் என அவர் வேறு பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும், விஜய் சேதுபதியின் ஜூங்கா, தும்பா, Friendship போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில், சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னிடம் இருந்த 2 லட்சம் ருபாய் பணத்தை எடுத்து அவர் 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தார். அதை பலரும் பாராட்டினார்கள்.


இதை தொடர்ந்து, தன் சொந்த செலவில் மக்களுக்காக 5வது ஆம்புலன்ஸை வாங்கிக் கொடுத்து உதவினார், மாற்றுத்திறனாளிக்கு பைக் வாங்கிக் கொடுத்தார்.

மேலும், பெற்றோல் பங்கில் பைக் வாங்க முடியாமல் கஷ்டப்பட்ட இளைஞரின் ஆசையை நிறைவேற்றி, அவருக்கு பைக் ஒன்றை பரிசாக கொடுத்து இருந்தார் நடிகர் பாலா.


இந்த  நிலையில்,  தூக்கி எறியப்படும் பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனம், பெட்ரோல் பங்க் ஆகியவற்றை செய்த பள்ளி மாணவன் ஒருவர், அதனை நடிகர் பாலாவிற்கு அன்பளிப்பு கொடுக்க எதிர்பார்த்து உள்ளார்.


அண்மையில் பெற்றோல் பங்கில் வேலை செய்யும் இளைஞனுக்கு பாலா பைக்  வாங்கி கொடுத்ததற்கு சின்ன அன்பளிப்பு செய்யும் முகமாக பாண்டிச்சேரியில்  உள்ள குறித்த மாணவன், நான் சென்னைக்கு வந்தது இல்லை பாண்டிச்சேரி வந்தா கட்டாயம் எனது பரிசை வாங்குமாறு அன்பாக கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது குறித்த காணொளி வைரலாகி உள்ளது.



Advertisement

Advertisement