• Dec 27 2024

குஷ்புவுக்கு என்னாச்சு? தொடை வரை போடப்பட்ட பெரிய கட்டுடன் அதிர்ச்சி போட்டோ

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்பு வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் குஷ்பு. இவர் அழகும் திறமையும் சேர்ந்த நடிகையாக காணப்படுகின்றார்.

80 மற்றும் 90 ஆம் ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அதன்படி ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உட்பட பல பிரபலங்களுடன் நடித்த இவர், மாடனான பெண் கேரக்டர் என்றாலும், குடும்பப் பாங்கான கேரக்டர் என்றாலும் அப்படியே பொருந்தி நடிக்கக் கூடிய திறமை கொண்டவராக காணப்பட்டார். அது மட்டும் இன்றி கிராமத்து வேடம் என்றாலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து விட்டார்.

இதை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். அவர்கள் இருவருமே தற்போது படித்து முடித்துவிட்டு தம்முடைய பணியில் கவனம் செலுத்த ஆரம்பித்து உள்ளார்கள். குஷ்புவின் மூத்த மகளான அவந்திக்கா சினிமா சம்பந்தமான படிப்பை முடித்து விரைவில் ஹீரோயினாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்த நிலையில், தற்போது நடிகை குஷ்பு தனது காலில் மிகப்பெரிய கட்டோடு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதில் 'நான் மற்றும் என்னுடைய பெஸ்டி' மிகச் சிறந்த காம்போ என பதிவிட்டு உள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு என்ன ஆச்சு? என பதற்றத்துடன் கேட்டு வருவதோடு கூடிய விரைவில் குணமடைய தமது பிரார்த்தனையையும் முன்வைத்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement