• Dec 26 2024

நடு வானில் சிக்கிய கொண்ட பூர்ணிமா... பதற்றத்தில் கத்தி கதறல்... நடந்தது என்ன?

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த பூர்ணிமா ரவி தற்போது நடு வானத்தில் பறந்து கொண்டிருந்த வேலை பயத்தில் உதவி உதவி கத்தும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது. என்ன நடந்தது என்று பார்ப்போம் வாங்க.


அராத்தி யூடீயுப் சேனல் மூலம் பல மக்களின் மனதை கொள்ளையடித்து பிரபலமானவங்க தான் பூர்ணிமா ரவி .விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களால் வெளியேற்றப்படாமல் தானாகவே பணப்பெட்டியை தூக்கி கெத்தாக வெளிய வந்த இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உடன் அன்னபூரணி திரைப்படத்திலும் நடித்து இருக்காங்க . 


பிக் பாஸ் பயணம் இவங்களுக்கு நேர் மறையான  விமர்சனங்களை கொடுத்தாலும் அதையும் தாண்டி படங்களுக்கு முயற்சிகளை எடுத்து கொண்டு சினிமா வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.பிக் பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு நண்பர்களோட ஊர் சுற்றி நேரத்தை  செலவிடுகின்றார்.


இந்நிலையில் பூர்ணிமா சமீபத்தில் வானத்தில் பறக்கும் சிப் லைன் விளையாட்டில் தனது நண்பர்களோடு கலந்து  கொண்டார். ஆரம்பத்தில் நன்றாக பறந்து கொண்டிருந்த சிப் லைன் இடையில் நின்றுவிடவே அந்த  நடு வானத்தில் பறந்து கொண்டிருந்த பூர்ணிமா பயத்தில் உதவி உதவி என்று உரத்த சத்தமாக தனது நண்பர்களை கூச்சலிட்டு கூப்பிட்டு இருக்கிறார். மிகவும் பயந்த இவர் தனக்கு தானே பயப்பிடாத பயப்பிடாத என்று சொல்லி கொண்டு இருக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவலாகி வருகிறது

Advertisement

Advertisement