• Dec 25 2024

சாய் பல்லவி வீட்டில் திருமணம்... வைரலாகும் நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் இதோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தனது முதல் காட்சியில் இருந்து பல லட்சம் ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்த சாய் பல்லவி கேரளாவில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தார். இந்நிலையில் தற்போது அவர் வீட்டில் விசேஷம் நடந்துள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 


தமிழில் தியா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து மாரி 2, என்.ஜி.கே, கார்கி என நடித்து வருகிறார். மேலும் தற்போது கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்து வருகிறார். நடிகை சாய் பல்லவிக்கு பூஜா எனும் ஒரு தங்கை இருக்கிறார். இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள்.


சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த சித்திரை செவ்வானம் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பூஜா சமீபத்தில் தனது காதலர் வினீத் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் என தகவல் வெளிவந்த நிலையில், தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. நிச்சயதார்த்தத்திற்கு கையில் மருதாணி போட்டு தயாராகும் பூஜா தனது அக்காவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement