• Oct 26 2024

இந்தியன் 3 - ரிலீஸில் புது ட்விஸ்ட்! கமலை தொடரும் சிக்கல்! என்ன செய்ய போகிறார் சங்கர்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் முன்னர் வெளியாகிய இந்தியன் திரைப்படம் ரசிகர்களினால் அதிகம் பார்க்கப்பட்டு வசூல் ரீதியில் வெற்றி பெற்றது. அதனை அடுத்து ஷங்கர், கமல் கூட்டணியில் கடந்த ஜுலை மாதம் ‘இந்தியன் 2’ படம் வெளியானது. 


இந்தியன் 2 படப்பிடிப்பு சமயத்திலே பார்ட் 3-க்கான பெரும்பாலான காட்சிகளை படமாக்கி விட்டார் இயக்குனர் ஷங்கர். ‘இந்தியன் 2’ கிளைமேக்ஸ் காட்சியிலே அடுத்த பாகத்திற்கான ப்ரோமோ ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது.


இதை ரசிகர்கள் வச்சு செய்துவிட்டார்கள். இந்த நிலையில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து, படம் படு தோல்வி அடைந்ததால் ‘இந்தியன் 3’ ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டாம் பாகம் தோல்வி அடைந்த காரணத்தால், சிறிது நாட்களுக்கு படத்தை ரிலீஸ் பண்ணாமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்துள்ளார் கமல்.


மேலும் நடிகர் கமல் ஹாசன் தற்போது தக் லைப் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் வெற்றி அடைந்த பின்னரே இந்தியன் 3-ஐ ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். அடுத்து ஒரு ஹிட்டாவது கொடுத்த பின் தான் இந்தியன் 3 படம் ரிலீசாக வாய்ப்புள்ளது.


Advertisement