• Dec 26 2024

புறநானூறு பட ஷூட்டிங்? தாமதமாக என்ன காரணம்? சூர்யா படம் வெயிட்டிங் லிஸ்ட்ல தான் இருக்கும் போல!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் `கங்குவா'. அந்தப் படம் நன்றாக வந்திருப்பதில் சூர்யா  மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறதாக சமீபத்தில் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். அதற்கு பிறகு அடுத்து அவருக்கு சுதா கொங்கரா படமான 'புறநானூறு' படத்தைத்தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இது ஆரம்பிப்பதில் தாமதம் ஆகுவதாக தகவல் கிடைத்துள்ளது. 


சூர்யாவின் 43வது படமான இதில், அவரோடு மிகவும் முக்கியமான கேரக்டர்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா இவர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைப்பதாக அறிவிப்பு செய்திகளும் வெளியாகின. ஜி.வி.பிரகாஷின் நூறாவது படமாகவும் 'புறநானூறு' அறியப்பட்டது. ரொம்பவும் சந்தோஷமாக ஜி.வியும் அதை எல்லா இடங்களிலும் பகிர்ந்து கொண்டார். 


இந்தப் படத்தை சூர்யாவே தன் 2D பேனரில் தயாரிக்க முன் வந்தார். 2023 அக்டோபரில் ஷூட்டிங் ஆரம்பிப்பதாகச் சொன்னார்கள், ஆனால் அது நடக்கவில்லை. பிறகு நிச்சயம் நவம்பரில் ஆரம்பமாகும் என்றார்கள், ஆனால் அப்போதும் தொடங்கவில்லை.


ஆரம்ப அறிவிப்புக்குச் சின்ன டீசருக்காக மட்டுமே படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இப்போது மற்றவர்களின் கால்ஷீட் எல்லாம் கிடைத்து, அதை ஒழுங்கு செய்து ஆரம்பிக்க இந்த வருட ஏப்ரல் மாதம் ஆகிவிடும் என முடிவு செய்திருக்கிறார்கள்.

Advertisement

Advertisement