• Dec 26 2024

தன் அன்புக்கு உரியவருக்கு உணர்ச்சி பூர்வமாக ஷீத்தல் செய்த காரியம்! அவ்வளவு நல்லவங்களா இவங்க? ரசிகர்கள் புகழ்ச்சி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் பப்லு பிரித்விராஜ் உடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர் தான் ஷீத்தல். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்து, சமூக வலைத்தளங்களில் ரொம்பவும் ஆக்டிவாக ரீலிஸ் வெளியிட்டு வந்தனர்.

இவர்களது விவகாரம் சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை ஏற்படுத்தி இருந்தாலும், எதையும் கண்டு கொள்ளாமல் ரொம்பவும் சந்தோசமாக தமது காதல் பயணத்தை தொடர்ந்து வந்தனர்.


எனினும், சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ஆனாலும், பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பப்லு பிரித்விராஜ், நான் ஷீத்தலை பிரிந்து விட்டேன் என்று எங்கேயாவது கூறினேனா? அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா? நீங்களே நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கூறுகிறீர்கள் என உருட்டி இருந்தார்.



ஆனாலும், ஷீத்தல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்த பப்லுவின் வீடியோ அனைத்தையும் டிலீட் செய்து, தற்போது தனது தனிப்பட்ட வீடியோவை மாத்திரம் ஷார் செய்து வருகிறார்.


இந்த நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷீத்தல் , தற்போது தனது தாயின் பிறந்த நாளை முன்னிட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், வயோதிபர் மடமொன்றிற்கு உணவு வழங்கி, அவர்களது ஆசிர்வாதங்களையும் பெற்றுள்ளார். அத்துடன் தனது தாயை நினைத்தும் பெருமை கொண்டுள்ளார். 


Advertisement

Advertisement