• Dec 25 2024

மீனா என்ன தான் பாவம் செய்தாங்களோ.. செருப்பை கழட்டி அடித்த விஜயா

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், சத்யா வரும்போது வழியில் சிட்டி தடுத்து நிறுத்துகின்றார்.மேலும் சத்யாவிடம் வீடியோவை காட்டி இதை உங்க மாமா தான் லீக் பண்ணது என்று சொல்ல, சத்யா நம்ப வில்லை. இந்த காரியத்தை நீ தான் செஞ்சிருப்பா எங்க மாமா செஞ்சி இருக்க மாட்டார் என்று திட்டி விட்டு செல்லுகின்றார்.

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு சத்யா செல்லும்போது அங்கு  மீனாவும் சீதாவும் முத்துவுக்கு வாங்கிய போனுக்கு சிம் போட்டு அதைப் பற்றி கதைத்துக் கொண்டு உள்ளார்கள். மறுபக்கம் ரோகினி வீடியோவை காட்டியதை தொடர்ந்து மீனா வீட்டுக்கு வருகின்றார் விஜயா.

அங்கு வந்ததும் சத்யாவை தேடி அவரை இழுத்து அடித்ததோடு செருப்பை கழட்டி அடிக்கின்றார். அவரை விடுமாறு மீனா கேட்ட  போதும் விஜயா விடவில்லை. இறுதியில் விஜயாவின் கைகளை தடுத்து அவன் என்ன செய்தான் என்று மீனா கேட்க, ரோகினி அந்த வீடியோவை காட்டுகின்றார்.

d_i_a

இதை பார்த்து மீனாவின் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றது. அதன் பின்பு சத்யாவும் தன்னை மன்னித்து விடுமாறு மீனாவின் காலில் விழுந்து அழுகின்றார். விஜயா சத்யாவை இழுத்துக் கொண்டு வெளியில் செல்கின்றார். ஆனாலும் மீனாவும் சீதாவும் அவனை விடுமாறு சொல்லி கெஞ்சுகின்றார்கள்.


கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத விஜயா இவனை போலீஸ் ஸ்டேஷனில் சொல்லி இழுத்துக்கொண்டு போக வைப்பேன், கம்ப்ளைன்ட் கொடுப்பேன் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், மீனாவுக்கு பைக்க திருடி கல்யாணம் பண்ணினாங்க.. இப்போ இரண்டாவது பொண்ணுக்கு ட்ரெய்னிங் கொடுக்குறாங்க என்று மீனாவின் குடும்பத்தின் மீது திருட்டு பட்டத்தை கட்டி விட்டு செல்லுகின்றார்.

இன்னொரு பக்கம் முத்து வயோதிபர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து கொண்டிருக்க, அவர் அருகில் நின்றவர்கள் எல்லாம் சத்யாவின் வீடியோவை பார்த்துக் கொண்டுள்ளார்கள். ஆனாலும் இந்த விடயம் இன்னும் முத்துவுக்கு தெரியவில்லை. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement