• Dec 25 2024

பாக்கியாவின் மருமகள்கள் போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க்கவுட் ஆகிட்டே..! எம்புட்டு சந்தோசம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  ஜெனியும் அமிர்தாவும் பிளான் பண்ணின படியே பாக்கியாவையும் ஈஸ்வரியையும் ரெஸ்டாரன்ட் கூட்டி வருகின்றார்கள் . ஆனாலும் ஈஸ்வரி தன்னை வீட்டுக்கு கொண்டு போய் விடுமாறு சொல்ல, அவரை சமாளித்து வைத்துள்ளார்கள்.

இதைத் தொடர்ந்து செல்வி போன் பண்ணவும், ஏதும் முக்கியமான விடயம் என்றால் மட்டும் கால் பண்ணுங்கள் என்று சொல்லி அதிகாரம் பண்ணிவிட்டு வைக்கிறார் ஜெனி. அதன் பின்பு நாலு பேரும் ரெஸ்டாரண்டில் என்ஜாய் பண்ணுகிறார்கள்.

d_i_a

சின்ன வயதில் செழியனை கூட்டிக்கொண்டு விளையாடிய நினைவுகளை எல்லாம் ஈஸ்வரி சொல்லிக் கொண்டிருக்கின்றார். மேலும் ரெஸ்டாரண்டில் சாப்பிடும் போது பாக்கியாவின் சமையலை விட நன்றாக இருப்பதாக சொல்லுகின்றார் ஈஸ்வரி.


இப்படி நான்கு பேரும் ரெஸ்டாரண்டில் கேரம்போர்டு விளையாடுவது, சாப்பிடுவது, டீ குடிப்பது என்று மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார்கள். இருந்தாலும் பாக்கியா செழியன் சாப்பிட்டானோ, இனியா சாப்பிட்டாலோ என்று வீட்டு ஞாபகமாகவே இருக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement