• Apr 24 2026

என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு… சிவகார்த்திகேயனை வம்பு இழுத்த ப்ளூ சட்டை மாறன்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த நடிகர்களுள், தற்போது தனக்கான தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான சேயோன் கிளிம்ஸ் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, சாமியாடி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதை  உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த படம் மிகப்பெரிய அளவில் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்கும் என்றும், படத்தின் கதை சிறப்பாக இருக்கும் எனவும் சினிமா வட்டாரத்தில் பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், பிரபல பத்திரிக்கை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், சிவகார்த்திகேயனை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “போஸ்டர்ல அருவாள், கத்தி, துப்பாக்கி, ரத்தம், சிகரெட் இல்லாம ஒருத்தனும் போஸ் தர மாட்டுறான். ப்ரமோஷன் டைம்ல கல்லூரி மாணவர்கள் பெற்றோர்களை மதிக்கணும், நல்லா படிக்கணும்னு புத்திமதிகள் வேற…” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, சிவகார்த்திகேயனின் படங்களில் சிகரெட், கத்தி, ரத்தம் போன்றவை குறைவாகவே காணப்படுகின்றன. குறிப்பாக, சிகரெட் குடிக்காமல் நடிக்கும் நடிகராக சிவகார்த்திகேயன் அறியப்படுகிறார். ஆனாலும், அவர் பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தெரிவிக்கும் புத்திமதிகளை குறித்து ப்ளூ சட்டை மாறன் இவ்வாறு விமர்சித்து பதிவு செய்துள்ளார்.

Advertisement

Advertisement