• Apr 24 2026

சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகை நித்யா மேனன்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நித்யா மேனன். நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து இட்லி கடை, தலைவன் தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நித்யா மேனன், தெலுங்கு சினிமாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இந்த நிலையில், நித்யா மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கேயுரி புரொடக்ஷன்’-ஐ தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் பேசுகையில், திரைப்படங்களை உருவாக்குவது என்பது வெறும் கதைகளை சொல்லும் செயல் அல்ல என்றும், அது மனிதர்களை ஆழமான உணர்ச்சி நிலையில் சென்றடையச் செய்யும் ஒரு படைப்பாற்றல் பயணம் என்றும் தெரிவித்துள்ளார். 


சிந்தனை மற்றும் பகுத்தறிவைத் தாண்டி, அமைதியான மாற்றங்களை உருவாக்கும் சக்தி படைப்புகளுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நடிகையாக தனது பயணம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இதுவே தனது செயல்முறையும் நோக்கமும் என்றும், இனி தயாரிப்பாளராகவும் அதே எண்ணத்தோடு படங்களை உருவாக்கப் போவதாகவும் நித்யா மேனன் கூறியுள்ளார்.

சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள நித்யா மேனனுக்கு, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement